மதுரை குருவிகாரன் சாலை உயர்மட்ட பாலம் கட்டும் பணி: ஆணையாளர் ஆய்வு

மதுரை குருவிகாரன் சாலை உயர்மட்ட பாலம் கட்டும் பணி: ஆணையாளர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்காெண்டார்.

மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு.

மதுரை மாநகராட்சி வைகை ஆற்றின் குறுக்கே செல்லும் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப்பணிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், நகரில் மையப் பகுதிக்குள் வெளியூர் செல்லும் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்வதால், அதனை தவிர்க்கும் வகையில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகளில் மழைநீர் வடிகால், நடைபாதை, தடுப்புகம்பிகள், மின்விளக்குகள், தடுப்புச்சுவர், கட்டுமான தரம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மண்டலம் 2 மஸ்தான்பட்டியில் காய்கறிகள் மற்றும் பூக்கழிவுகளிலிருந்து உரமாக்கம் நுண்ணுயிர் உரக்கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் .அரசு, உதவி செயற்பொறியாளர் .சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் .மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare