மதுரை மாவட்ட சிவாலயங்களில் கார்த்திகை சாேமவார சங்காபிஷேகம்

மதுரை மாவட்ட சிவாலயங்களில் கார்த்திகை சாேமவார சங்காபிஷேகம்
X

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில், கார்த்திகை மாதத்தில் சோமவாரத்தில், (திங்கள்கிழமை) சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில், கார்த்திகை மாதத்தில் சோமவாரத்தில், (திங்கள்கிழமை) சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.

ஓவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, சிவ ஆலயங்களில், சிவனுக்கு ஹோமம் செய்யப்பட்டு, சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்து, சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், திருவேடகம் ஏடகநாதர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாதர், தென்கரை மூலநாதர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், மேலமடை சௌபாக்யா விநாயகர், திருமங்கலம், மேலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் 1008, 108 சங்காபிஷேகம் சிவனுக்கு நடைபெறும். பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், அரசு விதிகளை பின்பற்றவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!