சாஸ்திரங்களை முறையாக கடைப்பிடித்தார் மகா பெரியவர்: இந்திரா சௌந்தரராஜன்
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் 'அனுஷ உற்சவம்' நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம். கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசுகையில்,
யாத்திரை செல்வது மடாதிபதிகளின் கடமை. மக்களை தேடி தேடி போய் தரிசனம் கொடுப்பது வழக்கம். பாரத தேசத்தில் எந்த சன்னியாசியும் செய்யாத காரியத்தை ஸ்ரீ மகா பெரியவர் செய்திருக்கிறார். அவரது காலடி படாத இடமே இல்லை
ரிஷிகள் அதிகமாக வாழ்ந்த மண் ரஷ்யா அங்கு செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம் ஆனால் சந்நியாசிகள் கடல் கடந்து செல்லக்கூடாது. அதனால் அவர் அங்கு செல்லவில்லை மேலும் மும்பையும் செல்லவில்லை .கடல் தாண்டினால் சாஸ்திர பங்கம் வந்துவிடும் என்பதால் பூனா வரை சென்றார்.
சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக முழுமையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர். குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. நாம் குருவை சிக்கென பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனிடம் மன சுத்தத்துடன் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்.
ஜபம் பூஜை அர்ச்சனை இவை இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள். ஒரு விவசாயி பெரியவரிடம் நான் சாதாரணமானவன் நான் வழிபாடு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது சூரியனை வழிபடு அதுவே போதும் என்றார். இன்று சனாதன தர்மத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன .ஆதி காலத்தில் இருந்து இந்து மதத்திற்கு சோதனைகள் இருந்து கொண்டே இருந்திருக்கிறது .நம் மதம் எப்போதும் யாராலும் அழிக்க முடியாத ஒன்று என்று வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும்.
இந்து மதம் எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாத ஒன்று. நாம் பல யுகங்களை கடந்து வந்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான மகான்கள் தோன்றிய மதம் இந்து மதம். புண்ணிய தீர்த்தங்களை நதிகளை நாம் அன்னையாக கருதுகிறோம்.
இன்று நவீனம் விஞ்ஞானம் நமக்கு கொடுத்திருக்கிற வசதியை விட கேடு அதிகம். பெரியவர் கட்டுப்பாடு உள்ள சுதந்திரம் வேண்டும் என்றார். ஆதிசங்கரர் மதத்தை ஸ்தாபித்தது வேதத்தை வளர்ப்பதற்காகத்தான். அது போல சன்னியாசி சகல உயிர்களுக்கும் சமமானவர் என்றும் என்கிறார் மகா பெரியவர். சன்னியாசிகள் பேதம் பார்க்கக்கூடாது மேலும் தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு நல்லது செய்ய வேண்டும் என்கிறார்.
உடலும் உணர்வுகளும் சம்பந்தம் இருக்கிறதும் என்கிறார் மகா பெரியவர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சாது தரிசனம் சாப விமோசனம். உலகில் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. மந்திர ஒலிக்குரிய சப்தம் மிகச்சிறந்தது. நம்முடைய நம்முடைய சிறுசிறு பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் வீண் போவதில்லை. இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu