கமல்ஹாசன் பிறந்தநாள்: தயாராகும் மதுரை ரசிகர்கள்

கமல்ஹாசன் பிறந்தநாள்:  தயாராகும் மதுரை ரசிகர்கள்
X

மதுரையில் கமல்ஹாசன் ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7 - ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் வண்ணமயமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7.-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை நகரில், மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள், நகரெங்கிலும் வண்ணமயமான சுவரொட்டிகள் ஓட்டியுள்ளனர். மதுரை வடக்கு தொகுதி சார்பில், மதுரை அண்ணாநகர், யாகப்பநகர், வண்டியூர், கோமதிபுரம் பகுதிகளில், அண்ணாநகர் முத்துராமன் தலைமையில், மக்கள் நீதி மையத்தை சேர்ந்த குணா அலி, நாகேந்திரன், வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மேலும், பிறந்த நாளன்று அன்னதானத்தையும், மாவட்ட நிர்வாகி அழகர், கென்னடி முன்னிலையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags

Next Story
விவசாயத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சிறந்த AI!