சோழவந்தான் அருகே 45 அணிகள் பங்கேற்ற கபாடி போட்டி..!

சோழவந்தான் அருகே 45 அணிகள் பங்கேற்ற கபாடி போட்டி..!
X

கபாடி போட்டி தொடங்கிய காட்சி.

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில், ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 45 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில், ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 45 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது.

சோழவந்தான்:

மதுரை, சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில், ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாம் ஆண்டு கபடி குழு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி ,திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 45 அணிகள் பங்கு பெற்றன.

போட்டியில், வெற்றி பெற்ற அணியினருக்கு மன்னாடிமங்கலம் தெற்கு கிளை அதிமுக செயலாளர் ராஜபாண்டி பரிசு தொகை 10,000 மற்றும் கோப்பை வழங்கினார். மேலும், இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கு பெற்ற வீரர்கள் அனைவருக்கும் உணவு இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை,நன்கொடையாளர்கள் செய்து கொடுத்தனர்.

கடந்த காலங்களில் கபாடி விளையாட்டு ஏதோ கிராமத்து விளையாட்டு என்று இருந்த சூழலில் இன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் கபாடி சேர்க்கப்பட்டுள்ளது. பல இளைஞர்கள் கபாடி வீரர்களாக இருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால் இன்று நாடு முழுவதும் கபாடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!