பறவை பேரூராட்சியில் ,சணல் பை தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா :தலைவர் பங்கேற்று துவக்கம்

பறவை பேரூராட்சியில் ,சணல் பை தயாரிக்கும்  பயிற்சி துவக்க விழா :தலைவர் பங்கேற்று துவக்கம்
X

மதுரை அருகே பரவை பேரூராட்சியில், சணல் பை தயாரிக்க பயிற்சி.

Jute Bag Production Inauguration பரவை பேரூராட்சியில்,இலவச சணல்-பைகள் தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா நடந்தது.

Jute Bag Production Inauguration

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில், ஜி.எச்.சி.எல்.பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது.

இந்த விழாவில்,பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார்.தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார்.பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து பயிற்சியை துவக்கி வைத்து, பெண்கள் திறமையை வெளிப்படுத்தி மன உறுதியுடன் தன்னம்பிக்கையுடன் சுய தொழிலை துவங்கி தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசி, பயிற்சி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், பவுண்டேஷன் நிதிபங்களிப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் பயிற்சியின் நோக்கம், செய்முறை விளக்கம்,

சந்தைப்படுத்துதல்,புதிய யுத்திகள் என, பல்வேறு செயல்பாடுகள், நேரம் தவறாமல் பயிற்சியில் பங்கேற்றுபயிற்சி சார்ந்த சிறப்பு அம்சங்களை தெளிவாக புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என, பேசினார். இதில் ,பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராஜா, கவுன்சிலர் சௌந்தர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜூட் பேக் தயாரிக்கும் முறஅதன் பயனையும் விளக்கி பேசிய பயிற்சியாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!