மதுரையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டம்

மதுரையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டம்
X

மதுரையில் பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மதுரையில் மாநகராட்சி வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நான்கு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, அரசு தமிழ்நாடு பாலிடெக்னிக் வளாகத்தில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு ஊடகங்கள் மற்றும் தின மற்றும் வார இதழ் நிருபர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்தனர்.

அவர்களிடம் நாங்கள் மாவட்ட ஆட்சியரின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வழங்கிய அனுமதி பெற்ற அடையாள அட்டையை வைத்துள்ளோம். வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே நின்று அங்கே அறிவிக்கப்படும் முடிவுகளை செய்தியாக எடுத்து மக்களுக்கு வழங்குவது எங்களுடைய வேலை, எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என கேட்டனர் .

ஆனால் போலீசார் எங்களுக்கு உங்களை உள்ளே விட அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் போலீஸ்காரர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் செய்தியாளர்கள் அந்த இடத்திலேயே நுழைவு வாயிலிலேயே முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future