மதுரையில் பாலம் கட்டும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
பைல் படம்
மதுரை நகரில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான உரிமையாளர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை நில எடுப்புச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 38ஃ2019)-ன்படி, மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு, கீழ்காணும் திட்டங்களுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்து தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டு, அதற்கான தீா்வாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் அரசிதழில், குறிப்பிடப்பட்ட நில உடமைதாரர்களில் இதுவரை மதுரை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத நில உடமைதாரர்கள் தீர்வாணைத் தொகையினை பெறும் வகையில், விடுபட்ட நில உடமைதாரர்களிடமிருந்து, ஆவணங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட நாட்களில் நடத்தப்படவுள்ளது.
வட்டம் , கிராமம், திட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் இடம்,நாள் மற்றும் நேரம் விவரம்:
1.மதுரை கிழக்கு , வண்டியூர் பிட் 2-வைகை வடகரை முதல் அண்ணாநகர் வழி விரகனூர் வரை சாலை அமைக்கும் பணி.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வண்டியூர் பிட்2 கிராமம்-12.05.2023 காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை.
2.திருப்பரங்குன்றம் , மாடக்குளம்: மதுரை சந்திப்பு- திருப்பரங்குன்றம் இரயில் நிலையங்களுக்கு இடையே (பழங்காநத்தம்) உள்ள இரயில்வே கடவு எண்.366-க்கு மாற்றாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணி.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மாடக்குளம் கிராமம்-15.05.2023 காலை 10.00 மணி முதல் 02.00 வரை
3.திருப்பரங்குன்றம் , மாடக்குளம்:மதுரை சந்திப்பு- திருப்பரங்குன்றம் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரயில்வே கடவு எண்.371-க்கு மாற்றாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணி.கிராம நிருவாக அலுவலர் அலுவலகம் மாடக்குளம் கிராமம்-15.05.2023 மாலை 03.00 மணி முதல் 05.45 வரை.
4.மதுரை மேற்கு , மேல்மதுரை:பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி.கிராம நிருவாக அலுவலர் அலுவலகம் மேல்மதுரை கிராமம்-16.05.2023 காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை.எனவே, மேற்காணும் விவரப்படி நடைபெறவிருக்கும் முகாமில் தவறாது கலந்து கொண்டு கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நில உடமைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம்:
1. மூலப்பத்திரம், 2. கிரையப்பத்திரம், 3. வில்லங்கச்சான்று,(1960 முதல் தற்போது வரை சார்பதிவாளர் கையொப்பத்துடன்) 4. பட்டா, சிட்டா நகல் மற்றும் கிராம நிருவாக அலுவலரிடம் பெறப்பட்ட நில உரிமையாளர் சான்று.5. மனைப்பிரிவு எனில், 6. ஆதார் நகல்-2, 8. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்-2, 9. புகைப்படம்-2
மேற்படி நாள்களில் நடைபெறும் முகாமில், கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பிக்காத நில உடமைதாரர்களின் தீர்வாணைத் தொகையினை மாண்பமை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் நில உடமையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu