டிவிஎஸ் நிறுவன புதிய தொழில்நுட்ப அலுவலகம் திறப்பு- அமைச்சர்கள் பங்கேற்பு

TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (TVS SCS) இன்று மதுரையில் அதன் புதிய தொழில்நுட்ப மைய அலுவலகத்தை, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் திறந்து வைத்தனர்.
TVS Office -இந்த புதிய தொழில்நுட்ப மையம் TVS SCS இன் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளிலும் முக்கிய பங்காற்றும் மற்றும் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை விரைவு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விநியோகச் சங்கிலி தீர்வு (Supply Chain Solutions) வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (TVS SCS) இன்று மதுரையில் அதன் புதிய தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்து அதன் சென்டர் ஆப் எக்ஸலன்ஸின் (CoE) விரிவாக்கத்தை அறிவித்தது.
தமிழக தொழில், முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக வர்த்தக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் இந்த புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். நிறுவனத்தின் செயல்பாடுகளின் முக்கியப் பிரிவான CoE, TVS SCS-ஐ உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த சப்ளை செயின் நிறுவனங்களில் முதன்மை இடத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவதோடு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாகவும் செயல்படும். நிறுவனம் தனது போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக மதுரையில் உள்ள சிறந்த திறமைகளை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றும் இரண்டு ஆண்டுகளில் 300 ஆக இருக்கும் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.
CoE விரிவாக்கம் குறித்து, TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் தினேஷ் பேசுகையில், " சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் மூலம் மதுரையில் இதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மையம் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, உலகளாவிய செயல்பாடுகளுக்கு சிறப்புச் சேவைகளை வழங்கும். மதுரையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தகத்தை துவக்கியதால் உள்ளூர் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்க எப்போதும் விரும்புகிறோம். எங்கள் பயணத்தில், CoE ஆனது TVS SCS இன் பின்-அலுவலக செயல்பாடுகளுக்கு தலைமை இடமாக (Back Office Capital) இருப்பதுடன், உலகளவில் எங்கள் செயல்பாடுகளுக்கான அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் மையமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குநர் ரவி விஸ்வநாதன் கூறுகையில், "இந்த விரிவாக்கத்தின் மூலம் CoE நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும், உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து பதிலளிக்கவும் துரிதமாக செயல்படவும் CoE உதவுகிறது. தவிர சமீபத்திய தொழில்நுட்ப திறன்களை உள்ளடக்கி நிபுணத்துவத்துடன் திகழ்கிறது. மதுரையில் இந்த விரிவாக்கம், உள்ளூரிலேயே நல்ல திறமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. மற்றும் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் துறையில், உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நனவாக்குவதில் முக்கிய உந்துசக்தியாக இருக்கும், எனத் தெரிவித்தார்.
இந்த வசதி ISO 27001:2013 சான்று பெறப்பட்ட ஒரு அமைப்பாகும். தொழிலை தரமானதாகவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளை பராமரிக்க தேவையான தகவல் அமைப்புகள், மேலாண்மை அமைப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளது.
2017ம் ஆண்டு நிறுவப்பட்ட மதுரையில் உள்ள செண்டர் ஆப் எக்ஸலன்ஸ், இப்போது ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. 300 க்கும் மேற்பட்ட சப்ளை செயின் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என வலுவான பணியாளர்களைக் கொண்டுள்ளது. புதிய பிரிவானது, மொத்தம் 13,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும். தொழில்நுட்ப தயாரிப்பு மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல், பகுப்பாய்வு மற்றும் வணிக நுன்ணறிவு ஆதரவு மற்றும் அதன் உலகளாவிய செயல்பாடுகளுக்கான வணிக செயல்முறை அவுட்சோர்சிங் போன்ற மேம்பட்ட சேவைகளை வழங்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu