மதுரையில், மூதாட்டிக்கு வாக்களிக்க உதவிய அமைச்சர்!
அமைச்சர் பிடிஆருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர்: தபால் ஓட்டு கால வரையறை முடிந்த நிலையில் வாக்குச்சாவடிக்கு நேரில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்:
மதுரை:
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் லீலா இவருக்கு, வயது 99. இவரது மகள்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவரது இன்னொரு மகள் வீட்டில் தவுட்டு சந்தை பகுதியில் தங்கி இருக்கிறார். இவருக்கு, ஓட்டு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. கே. நகர் ,மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் உள்ளது.
தபால் ஓட்டு வரையறை அளிக்கும் காலத்தை தவறவிட்ட இந்த மூத்த குடிமகள். தமது மகள் மூலமாக வாக்களிக்கும் கோரிக்கையை, அமைச்சர் பி.டி. ஆர். கவனத்துக்கு கொண்டு சென்றாராம். அதையடுத்து, அமைச்சர், அவர் தன் அலுவலக பணியாளர்களுக்கு உத்தரவிட்டு, அவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு, லீலாவை, வெற்றிகரமாக தனது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu