மதுரை நகரில் கழிவுநீர் பெருக் கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி

மதுரை நகரில் கழிவுநீர் பெருக் கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி
X

மதுரை மேலமடை, தாசில்தார் நகர் சுந்தர முருகன் தெரு. வார்டு எண். 36-ல் அவலம்.

மேலும் ,சாலைகள் மோசமாக உள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் தடுமாறு என்ற நிலை ஏற்படுகிறது.

மதுரை நகரில் பல இடங்களில் கால்வாய் சீரமைக்கப்படாதால், மழை காலங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையிலே குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மதுரையில், கடந்த சில மாதங்களாக, பாதாள சாக்கடை பணிக்கும் மற்றும் குடிநீர் பணிக்காக சாலைகளை பெரிய பள்ளங்கள் தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் கழிவுநீரானது குடியிருப்பு அருகே, குளம் போல தேங்கி கொசு அதிகரிப்பதகற்கு காரணமாக உள்ளது.

மதுரை அண்ணா நகர், மேலமடை தாசில்தார் நகர், 36 மற்றும் 37 -ஆவது வார்டுகளில் சௌபாக்கியா விநாயகர் கோவில் தெரு, சுந்தர முருகன் கோவில் தெரு, வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, வள்ளலார் தெரு ஆகிய தெருக்களில் கழிவு நீர் வாய்க்காலில் பெருக்கெடுத்து சாலைகளில் மழை நீருடன் தேங்கி யுள்ளது. இதனால், இப்பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் அந்த கழிவுநீர் தேங்கியுள்ள பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால், தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின் றனர். மேலும், மதுரை அண்ணா நகர் மேலமடை மருதுபாண்டி தெருவில் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீரானது குளம் போல தேங்கியுள்ளன. இப் பகுதிகள் வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர், தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது. மேலும் ,சாலைகள் மோசமாக உள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் தடுமாறு என்ற நிலை ஏற்படுகிறது.

இது குறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய ஆர்வம் காட்டு விலையின கூறப்படுகிறது. மேலும், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் தேங்கும் கழிவு நீரை துரிதமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Tags

Next Story
ai healthcare products