மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கணவன்- மனைவி உயிரிழப்பு

மதுரையில்  ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கணவன்- மனைவி உயிரிழப்பு
X

மதுரையில் வீட்டில் இருந்த ஏசியில்  ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த கணவன்-மனைவி

ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததைப் பார்த்த இருவரும் வெளியே தப்பி வர முயன்றபோது தீயில் சிக்கி உயிரிழந்தனர்

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த சக்திகண்ணன்(45.) இவர் தனது மனைவி சுபா மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் படித்துவிட்டு அங்கேயே உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.

நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ளஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கரும் புகை சூழத் தொடங்கியுள்ளது. அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்றபோது, தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி, இருவரது உடலிலும் தீப்பற்றியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலயே இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வருவதைப, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டின் கீழே தூங்கி கொண்டிருந்த அவர்களது மகன், மகள் ஆகிய இருவரையும் மீட்டனர். மாடியில் உள்ள அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கூடல்புதூர் காவல் நிலைய போலீஸார், விபத்தா, தற்கொலை முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business