மதுரை அருகே வீடு புகுந்து திருடியவர்கள் கைது

மதுரை அருகே வீடு புகுந்து திருடியவர்கள் கைது
X
மதுரையில் வீடுபுகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பொருள்கள் பறிமுதல்

மதுரையில், வீடுபுகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் 1/2 கிலோ வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சமீப நாட்களில் மதுரை ஆண்டாள்புரம், வசந்த நகர் பகுதியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என, மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை சுப்ரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர் மணிக்குமார் குழு அனைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இரவு நேரங்களில் இதுவும் ஒன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவது அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, இப்படிப்பட்ட பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்ததை தொடர்ந்து ஆண்டாள்புரத்தை சேர்ந்த கணேசன் மற்றும் 16 வயது சிறுவனையும் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் போது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டது கரிமேடு பகுதியைச் சேர்ந்த மீனா மற்றும் அனுசியா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் போலீசார் நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து, அவர்களிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 1/2 கிலோ வெள்ளி பொருள்களையும் கைப்பற்றிய தனிப்படை போலீசார் நான்கு பேரையும் நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai marketing future