சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க ஆர்ப்பாட்டம்

சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க ஆர்ப்பாட்டம்
X

மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இந்து மக்கள் நல இயக்கத்தினர்.

கொடைக்கானல் சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி மதுரையில் இந்து மக்கள் நல இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக இந்து மக்கள் நல இயக்கத்தைச் சேர்ந்த தென் மண்டல தலைவர் சந்தன கருப்பண்ண சுவாமி தலைமையில் சிறுமி மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பச்சோலை ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவியின் உடல் பள்ளியின் பின்புறத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது . இச்சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானல் மாணவியின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business