மதுரை மாவட்டத்தில் பலத்த மழை:சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்த சூழலில் சுமார் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மர்மநபர்களின் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினர்.இறுதியாக நெடுஞ் சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், விளாங்குடி, அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், பூவந்தி, வரிச்சூர், கள்ளிக்குடி, பேரையூர், செக்கானூரணி, மேலக்கால், தேனூர், துவரிமான், நாகமலைபுதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மதுரை நகரில், விடிய, விடிய பலத்த மழை பெய்தால், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் குளம் போல சுற்றி வளைத்து நீர் வீட்டு வாசலில் நின்றது.
மருதுபாண்டியர் தெரு, ஆறாவது மெயின் ரோடு, சௌபாக்ய கோயில் தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து, சாலையில் கழிவு நீர் ஓடின. மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனத்தில் சென்ற இருவர் தவறி விழுந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu