மதுரையில் பலத்த மழை, மின்னல் தாக்கி இடிந்து விழுந்த பழைய கட்டடம்!

மதுரையில் பலத்த மழை, மின்னல் தாக்கி இடிந்து விழுந்த பழைய கட்டடம்!
X

மதுரையில் பலத்த மலையால், பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது.

மதுரையில் பலத்த மழை, மின்னல் தாக்கி பழைய கட்டடம் இடிந்து விழுந்தது.

மதுரையில் மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மதுரை:

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் ,நள்ளிரவு நேரங்களில் மதுரையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை காக்கா தோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டடத்தின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால், கட்டடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது. இதனால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. அதேபோல், காஜிமார் தெரு பகுதியை இருந்த பழமையான கட்டடம் ஒன்று இடி விழுந்து நள்ளிரவில் சரிந்து விழுந்துள்ளது. மேலும், கட்டடத்தின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஆட்கள் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது., அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில், நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டங்களில் சாலையில் பலவற்றில் மழை நீர் குலம்புல தேங்கியுள்ளன மதுரை நகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது சாலையில் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது பள்ளங்கள் சரிவர மூட மதுரை மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் துரிதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ,சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers