மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சி: நடிகர் விஷ்ணு விஷால்

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சி: நடிகர் விஷ்ணு விஷால்
X

மதுரையில் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால்

கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்திற்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் கட்டா குஸ்தி திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால்.

கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம். குள்ள நரி கூட்டதில் இருந்து எனது படங்களுக்கு உதயநிதி ஆதரவு அளித்து வருகிறார். கட்டா குஸ்தி படத்தை பார்க்காமல் உதயநிதி வெளியிட சம்மதம் தெரிவித்தார்,

மக்களுக்கு நல்ல படத்தை வழங்கிய திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. விமர்சனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், எல்லா வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.13 வருட உழைப்பின் பலன் எனக்கு இனிமேல் தான் கிடைக்கும். மக்களின் அன்பினால் 13 வருடத்தை கடந்து உள்ளேன்.

திரைத்துறையில் ஒவ்வொரு படத்தையுன் மிக கவனமாக கையாண்டு வருகிறேன். மக்கள் நல்ல படத்தை மட்டுமே திரையரங்குகளில் வந்து பார்க்கின்றனர். உதயநிதி நட்பின் ரீதியாக இப்படத்தை பார்க்காமல் வெளியிட சம்மதம் தெரிவித்தார். கட்டா குஸ்தி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் உதயநிதி தெரிவித்தார். என்னுடைய படத்திற்கு கதை மிக முக்கியமானது கதைகள் மட்டும்தான். கதைதான் படத்தை வெற்றி பெறச் செய்யும் என்று தெரிவித்தார்.

திரைப்படத்தைப் பற்றி...கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பரை சொத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை.

அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் வீராங்கனை என்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஆயிரம்பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்பார்கள் அந்தக்காலத்தில். இரண்டு பொய்களைச் சொல்லி இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.அதன்பின் நடப்பவற்றை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் கட்டா குஸ்தி.

Tags

Next Story
வெள்ளை அவல்..! உங்களின் உடல்நலத்தை ஊக்குவிக்கும் உணவுப் பொக்கிஷம்..!