மதுரை கோயில்களில், குருப் பெயர்ச்சி விழா

மதுரை கோயில்களில், குருப் பெயர்ச்சி விழா
X

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி யாகம்.

குரு பகவான், மகர ராசியிலிருந்து- கும்ப ராசிக்கு பெயர்ந்ததையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

மதுரை பகுதி கோயில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி மகா யாகமானது, ஈஸ்வர பட்டர் தலைமையில் நடைபெற்றது. குரு பகவான், மகர ராசியிலிருந்து- கும்ப ராசிக்கு பெயர்ந்ததையொட்டி, மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதேபோல, மதுரை மேலமடை சௌபாக்யா ஆலயத்தில், குருப்பெயர்ச்சி மஹாயாகம் நடைபெற்றது.

இதேபோல், மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், குருப் பெயர்ச்சியையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு , சிறப்பு அபிஷேகமும், பூஜை நடைபெற்றது.

மதுரை அருகே அலங்காநல்லூரில்..மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சத்திர வெள்ளாலபட்டி கிராமத்தில் அமைந்துள்ள வலா குருநாதன் கோவில் குருபெயர்ச்சியையொட்டியாக பூஜை நடைபெற்றது.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை