மதுரை மாவட்ட கோயில்களில் நவ. 13-ல் குருப்பெயர்ச்சி விழா

மதுரை மாவட்ட கோயில்களில் நவ. 13-ல் குருப்பெயர்ச்சி விழா
X

பைல் படம்

குருபெயர்ச்சி விழாவின்போது (நவ.13 ) சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில் நவ. 13-ம் தேதி சனிக்கிழமை குருப் பெயர்ச்சி விழா, அரசு அறிவித்த கட்டுபாடுகளுடன் நடைபெறுகிறது.

மதுரை அருகே விசாக நட்சத்திர கோயிலான, பிரளயநாத சிவன் ஆலயத்தில், நவ. 13-ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இக் கோயிலில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் இளமதி, தொழிலதிபர் எம். மணி, பள்ளித் தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன், ஆலய கணக்கர் சி. பூபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.இதேபோல், மதுரை மேலமடை, சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், நவ. 13.ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு குரு ப்ரீதி ஹோமங்களும், அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குருபெயர்ச்சி விழா 11ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 13ஆம் தேதி சனிக்கிழமை முடிய நடைபெற உள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திரரதவல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.

அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறும்.இவ்விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைபுரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

இந்த ஆண்டு வருகிற 11-ஆம் தேதி வியாழக்கிழமை10.45அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது 13-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி6.10மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி,திருமஞ்சனம்,சிறப்புபூஜைகள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி. குருபெயர்ச்சி விழாவின்போது 13-ம் தேதி சனிக்கிழமை அன்று ஒரு நாள் முழுவதும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.குருபெயர்ச்சியை முன்னிட்டு, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம்,கடகம், கன்னி,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும்.

விழா ஏற்பாடுகளை, செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருவார்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!