கோ பேக் மோடி எனச் சொன்னவர்கள் இன்று வரவேற்கும் நிலை வந்துள்ளது: பாஜக கருத்து
பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் பேக் மோடி என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
மதுரையில், புறநகர் மாவட்ட பாஜக சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டடத்தில், பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியளர்களிடம் மேலும் கூறியதாவது:சென்னையில் பாஜகவின் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவுத்தலைவர் பாலசந்தர் கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று உள்ளது.இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தக்கொலை குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளது போல தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ள இந்தச்சம்பவம் தமிழகத்திற்கு பிரதமர் வருகையையொட்டி ஒரு அச்சுறுத்தலாக நடந்துள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.கொலையை செய்தது யாராக இருந்தாலும், என்ன சாதி, மதம், யாராக இருப்பினும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்றது தமிழகத்தில் நாசக்கார சக்திகளுக்கு உற்சாகம் தருவது போல நடந்து விடக்கூடாது.கிழக்கே போகும் ரயில் என்ற சினிமா எடுத்த இயக்குனரின் மாவட்டத்தில் ரயிலே இல்லை. தற்போது மதுரையிலிருந்து தேனி செல்லும் ரயில், இது மேற்கே போகும் ரயில்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு மாநில மாவட்ட நிர்வாகிகள் அமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது.சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி பாஜக மட்டும் தான். பிறப்பின் அடிப்படையில் தலைவரை நியமிக்கும் கட்சி பாஜக அல்ல.திமுகவில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் தந்தையோடும், மகன் படங்களோடும், அமைச்சர்கள் கூட தங்கள் மகன்களின் படங்களோடு தான் போஸ்டர் ஒட்டுகின்றனர். தமிழ்நாடு முழுக்க முதல்வர் ஸ்டாலினோடு உதயநிதி ஸ்டாலின் படத்தை போடுகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தால் தான் திமுகவில் இருக்க முடியும்.பாஜகவில் உழைப்பவர்களுக்கு புதியவர்களுக்கு இளைஞர்களும் இடம் உள்ளது.
பதவி, பொறுப்பு உள்ளது. 33 தவீத இடஒதுக்கிடு கொடுக்கிற கட்சி பாஜக.முதன்முதலில், தலித் ஒருவரை நிர்வாகி ஆக்கியதை மார்க்சிஸ்ட் கட்சியினர் சாதனையாக கூறுகின்றனர். பாஜகவில் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று அவர்களுக்கு அசாதாரண செய்தியாக உள்ளது.உண்மையான சமூகநீதி சுயமரியாதை உள்ள கட்சி பாஜக. திமுகவினர் முதுகையும் இடுப்பையும் இரண்டடி வளைத்து தான் திமுக தலைவர்களை சந்திக்க முடியும்.
தமிழகத்திற்கு கம்பீரமாய் சிங்கம் போல் பிரதமர் வந்தார்.திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் மோடி என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர்.மதுரையில், வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ள கல்குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விதி மீறல் இல்லாத குவாரிகளை திறந்து தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என பேசினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu