மதுரை ரயில் நிலையத்தில் காந்தி ஐயந்தி விழா

மதுரை ரயில் நிலையத்தில் காந்தி ஐயந்தி விழா
X

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு, கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு மதுரைக்கு ரயில் மூலம் வருகை புரிந்தார்

மதுரை ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தி விழா:

மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு மதுரைக்கு ரயில் மூலம் வருகை புரிந்தார்.அதை நினைவு கூறும் வகையாக, ரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அது "காந்தி கார்னர்" என அழைக்கப்படுகிறது. அந்த நினைவுச் சின்னம் அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு, கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் ,செப்டம்பர் 16 முதல் நடைபெற்று வரும் இரு வாரத் தூய்மை பிரச்சார விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக இருக்கும் ஒரே ஒரு பூமியை காப்பாற்ற, ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியினை, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் துவக்கி வைத்தார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுழற்சி செய்வது சிரமம், நீர் மற்றும் உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது, சுரப்பி சீர் குலைவு மற்றும் புற்றுநோயை ஏற்படுகிறது, பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கிறது, நமது உணவுச் சங்கிலியை பாதிக்கிறது. இது போன்ற இன்னும் பல கேடுகளை விளைவிக்கிறது. பிளாஸ்டிக் திரவ உறிஞ்சி, உணவு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தபடும், பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் குச்சி மிட்டாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், சிறு குறு கரண்டிகள் போன்ற பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர் பொருட்கள், சில்வர் டப்பாக்கள் போன்றவற்றை பயன்படுத்த வலியுறுத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நடைபெற்ற தூய்மை பணிகள் மற்றும் பிரச்சாரப் பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மதுரை ரயில் நிலைய முதல் நடைமேடையின் மின்தூக்கி சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றி நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. விழாவில் , கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!