மதுரை அருகே முன் விரோதத்தில் தாக்குதல்: 4 பேர் கைது

மதுரை அருகே முன் விரோதத்தில் தாக்குதல்: 4 பேர் கைது
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்து செய்தனர்

மாட்டுத்தாவணியில் முன் விரோதம் காரணமாக வியாபாரி மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது:

கே புதூர் நடுப்பட்டியை சேர்ந்தவர் சமையன் மகன் சின்னத்துரை(46.) இவர் மாட்டுத்தாவணி நுழைவு வாயில் அருகே கடை நடத்தி வருகிறார். இவரை போல கருவாட்டு பாய் என்ற முஸ்தபா உட்பட சிலரும் கடையநடத்தி வருகின்றனர். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சின்னத்துரையை, கருவாட்டு பாயும், சாகுல், சையத், நவீன் உள்பட சிலர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சின்னத்துரை மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

பீபிகுளம் உழவர் சந்தை அருகேபழ வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது:

மதுரை மீனம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பாண்டித்துரை( 22.). இவர் பீபிகுளம் உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் யுவராஜ் என்ற நயன்தாரா(19.). இவர் பழ வியாபாரி பாண்டித்துரையை கத்தி முனையில் முரட்டு அவரிடம் இருந்து ரூபாய்950ஐ வழிப்பறி செய்துவிட்டார் .இந்த சம்பவம் குறித்து பாண்டித்துரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த யுவராஜை கைது செய்தனர்.

செல்லூர் மீனாம்பாள் புரத்தில் கத்தி முனையில் ரூ.1400 வழிப்பறி:இரண்டு ரவுடிகள் கைது:

மதுரை, தத்தனேரி கணேசபுரம் பாண்டி மகன் வல்லரசு( 23.) இவர் செல்லூர் மீனாம்பாள் புறத்தில் உள்ள காபி கடை அருகே நின்று கொண்டிருந்தார். அவரை கருப்பாயூரணி ஒத்த வீடுவை சேர்ந்த மாரிமுத்து மகன் ரவுடி மார்க்கண்டேயன் (31,). ஆனையூர் இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் மகன் ரவுடி அஜித்குமார் என்ற காத்தாடி( 23 )ஆகிய இருவரும் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்துரூ 1400ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வல்லரசு செல்லூர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் மார்க்கண்டேயன், அஜித்குமார் என்ற காத்தாடி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கூடல் புதூரில் குடிபோதையில் பெண்ணுக்கு தொல்லைசெய்த நபரை தட்டிகேட்ட கணவரை தாக்கிய நபர் கைது:

மதுரை புதூர் வானவில் நகர் சின்னத்துரை மகன் அருண்பாண்டி(29.) இதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அருண்பாண்டியின் மனைவியும் ராஜ்குமாரும் கே.கே. நகரில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர் .இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் அருண்பாண்டியன் வீட்டுக்கு சென்ற ராஜகுமார். வீட்டின் கதவை தட்டி அவருடைய மனைவியை ஆபாசமாக பேசி தொல்லைகொடுத்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து தட்டி கேட்ட கணவர் அருண்பாண்டியை பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து அருண்பாண்டி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு அவரை வெட்டிய வாலிபர் ராஜ்குமாரை கைது செய்தனர்.

புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளி தவறி விழுந்து பலி:போலீஸ் விசாரணை:

மதுரைகே புதூர் விஸ்வநாத நகர் அண்ணா மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சுந்தர். இவரால் வாய் பேச முடியாது காதும் கேட்காது. இந்த நிலையில் கே புதூர் சிட்கோ தொழில்பேட்டையில் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவர் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய சகோதரர் சரவணன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரைத்துறையில் ரயில்வே தண்டவாளம் அருகே வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது:

மதுரை கீரைத்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தானபோஸ். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் ரயில்வே தண்டவாளம் அருகே இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக பதுங்கி இருந்த இரண்டு பேரை கண்டார். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்திய போது கீரைத்துரை மேலத்தோப்புவை சேர்ந்த நாகராஜ் மகன் சரவணன்( 22 )தெரிய வந்தது. அவரிடம் சோதனை செய்தனர். அவர் நீண்ட வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அந்த வாளை பறிமுதல் செய்து சரவணனை கைது செய்தார்.தப்பி ஓடியவர் யார் என்று விசாரித்த போது அவர் பெயர் நாகேந்திரன் என்று தெரியவந்தது .அவரை தேடி வருகின்றனர் .

எஸ். எஸ். காலனியில் வெவ்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது:ரூ 32 ஆயிரம் பறிமுதல்:

மதுரை எஸ் எஸ் காலனி ராமகிருஷ்ணன் தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய நேரு நகர் ராமகிருஷ்ணன் தெருவை சேர்ந்த சையத் கான் ராஜா( 41 ),அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் 35, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெயபிரகாஷ், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விஜி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர் .அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகளையும் சூதாடிய பணம் ரூபாய் 20 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்‌

இதே போல,நேரு நகர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே பணம் வைத்து சூதாடிய எஸ் எஸ் காலனி வடக்கு வாசலை சேர்ந்த ஜெயபாண்டி 56 ,சிவ பிரசாத் மகன் விக்னேஸ்வரன் 39, மைதீன் ஆண்டவர் முதல் தெருவை சேர்ந்த அப்துல் மாலிக் மகன் ஷாருக்கான், ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 12,390ஐ பறிமுதல்செய்து அவர்கள் விளையாடிய சீட்டு கட்டுக்களையும் எஸ் எஸ் காலனி போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையில் எஸ் எஸ் காலனியில் இரண்டு இடங்களில் பணம் வைத்து சூதாடிய மொத்தம் ஏழு பேரை கைது செய்து ரூ 32390ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிந்தாமணியில் கட்டிட டிசைன் அலுவலகத்தை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் ஒரு கிலோ வெள்ளி கொள்ளை:

சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்தவர் குருநாதன் மகன் ஈஸ்வரன்( 31.) இவர் சிந்தாமணி விநாயகர் தெருவில் கட்டிட முகப்பு தோற்ற டிசைனிங் அலுவலகம் வைத்துள்ளார். வழக்கம்போல் அலுவலகத்தை மூடி விட்டு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர்மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது அதன் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு உள்ளே வைத்திருந்த பணம் ரூ ஒரு லட்சமும், வெள்ளிக்கட்டிகள் ஒரு கிலோவையும் மர்மஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஈஸ்வரன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருலட்சம் பணமும் வெள்ளிக்கட்டிகளையும் கொலை எடுத்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளித்துக்கொண்டிருந்த பக்தரிடம் பணம் செல்திருடிவர் கைது:

மதுரை நாகமலை புதுக்கோட்டை சம்பக் குடியை சேர்ந்தவர் பாண்டி மகன் பிரபு( 39.). இவர் திருப்பரங்குன்றம் கோயி லுக்கு சாமி கும்பிடச் சென்றார். அவர் திருப்பரங்குன்றம் சரவணபொய்கை கரையில் தனது செல்போனையும் பணம் ரூபாய் 1200ஐயும் வைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதை கவனித்துக் கொண்டிருந்த ஆசாமி ஒருவர் அவர் வைத்திருந்த செல்போனையும் ரூ 1200ஐயும் திருடும்போது கையும் களவுமாக அவரை பிடித்தனர். பிடிபட்டவரை திருப்பரங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது மதுரை தெப்பக்குளம் பகலவன் நகரை சேர்ந்த தங்கம் மகன் கருப்புசாமி( 38 )என்று தெரியவந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

ஸ்காட்ரோடு பாண்டி பஜாரில் செல்போன் கடையில் செல்போன்கள் திருட்டு: மர்ம ஆசாமி கைவரிசை:

மதுரை கே.புதூர் ராமவர்மா நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் நைனா முகமது மகன் காதர் பாட்ஷா 32 .இவர் ஸ்காட்ரோடு பாண்டி பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வைத்திருந்த 6 செல்போன்களை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து காதர் பாட்ஷா திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கடையில் செல்போன்கள் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

ஜெய்ஹிந்தபுரத்தில் டாஸ்மார்க் அருகே சட்ட விரோதமாக பார் நடத்திய மூன்று பேர் கைது:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. அதன் அருகே சட்ட விரோதமாக பார் ஒன்றை நடத்தி வந்தனர். இது ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு தெரிய வந்தது.அவர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட பாருக்கு சென்று சோதனை நடத்தினார் .அது அனுமதி பெறாமல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பார் நடத்திய தினகரன் , பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் 61 ,சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகர் முதல் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் 49, ஆகிய மூவரையும் கைது செய்தனர். பார்நடத்த பயன்படுத்திய கேஸ் ஸ்டவ் ஒன்று, சிலிண்டர் ஒன்று, 15 சேர்கள்,15நாற்காலிகள், சோடா பாட்டில் 19 ,வாட்டர் பாட்டில் 104, கூல்ட்ரிங்ஸ் 22, பிளாஸ்டிக் கப் 90, காலியான பிராந்தி பீர் பாட்டில்கள்180 முதலியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Tags

Next Story