மதுரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது

மதுரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
X

மதுரை பாலத்தில் தரம்புரண்ட சரக்கு ரயில் பெட்டி

மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்த சரக்குரயில் பெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் தடம் புரண்டது

மதுரையில் சரக்கு ரயில்தடம்புரண்டது: இதனால்மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் காலதாமதமாக புறப்பட்டது:

மதுரை டிராக்டர்கள் போக்குவரத்திற்கு பயன்படும் சரக்கு ரயில் கூடல் நகரில், இருந்து மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது.அந்த ரயிலின் கடைசி சரக்குபெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் பாதையை விட்டு இறங்கியது.இதனால், மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர் சென்னை ரயில், மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.

பின்பு, அந்த ரயில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, குருவாயூர் சென்னை விரைவு ரயில், மதுரையில் இருந்து மாலை நான்கு மணிக்கு மேல் புறப்பட்டு சென்றது.தடம்புரண்ட ரயில் பெட்டியை சீர் செய்வதற்காக அடுத்த இரட்டை ரயில் பாதையில் குருவாயூர் ரயில் மதுரைக்கு பின்புறமாக வந்த பிறகு விபத்து சீரமைப்பு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்றது. கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் சமயநல்லூரில் நிறுத்தப்பட்டது. விபத்து, சீரமைப்புக்கு வசதியாக பாதிக்கப்பட்ட சரக்கு பெட்டியும் மற்றும் இரண்டு பெட்டிகளும் தவிர மற்ற சரக்கு பெட்டிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டன.மதுரையிலிருந்து குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் மதியம் நான்கு மணிக்கு மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ரயில்கள் திருமங்கலம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது .இது, பல்வேறு ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags

Next Story
ai as the future