மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்

மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்
X
கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த ரூ. 12 லட்சத்து 785 தொகையை மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது

மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது அளிக்கப்பட்ட பண மோசடி புகார் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் பாக்கியராஜன் கரிமேடு குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், தங்களது நிதி நிறுவனத்தில் ஞான ஒளிபுரம் சகாயமாதா தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ்வரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த பணம் ரூபாய் 12 லட்சத்து 785 ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஊழியர் விக்னேஸ்வரன் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Tags

Next Story