மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
X

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் இனிப்பு வழங்கிக்கொண்டாடினர்.

தமிழக முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

திமுக தலைவருமான முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு (அல்வா) வழங்கினர் .திமுக தலைவருமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை வடக்கு மாசி வீதி மற்றும் சிம்மக்கல் சந்திப்பில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா திமுக 51 வது வார்டு வட்டச் செயலாளர் ஏஜே. அசோக்குமார்,தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு (அல்வா) இனிப்பு வழங்கினார்.இதில், திமுக நிர்வாகி தளபதி பாலு மற்றும் 51 வது வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முத்துவேல் கருணாநிதி இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார்.

Tags

Next Story
ai solutions for small business