தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் விடுதலை
தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி.
Former Central Minister acquitted From Tahsildar Case
தமிழகத்தில் முதல்வராக இருந்து மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி. இவர் மதுரையில் வசித்து வருகிறார். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலானது நடந்தது. அப்போது தாசில்தாரை தாக்கியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அது பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் மதுரை உயர்நீதிமன்ற கிளை கோர்ட்டிற்கு வந்து நேரில் ஆஜராகியிருந்தார்.
முன்னாள் முதலவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மீதான வழக்கில் நீதிமன்றம் விடுதலை வழங்கி உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, தாசில்தாரை தாக்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டடிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் 14 ஆண்டுகள் கழித்து அந்த வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu