மதுரையில் வைகை தடுப்பணைகளில் நுரை பொங்கும் தண்ணீர் வர காரணம் என்ன?

மதுரையில் வைகை தடுப்பணைகளில் நுரை  பொங்கும் தண்ணீர் வர காரணம் என்ன?
X

மதுரையில் ஓடும் வைகை ஆற்றில் தண்ணீர் நுரையுடன் செல்கிறது.

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு முழுவதிலும் பெய்த கன மழை காரணமாக, வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதையடுத்து, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நுரை பொங்கி நிற்பதால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டவரும் நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால், நுரை பொங்குகிறதா? இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. மழை பெய்துவரும் நிலையில் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!