அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?

அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?
X

அவனியாபுரம் பெரியசாமி நகர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.

மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையால், பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .மழையால், அவனியாபுரம் புது குளம் கண்மாய் நிரம்பியது. கண்மாய் நீர் பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதனால், இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மழைநீர் சூழ்ந்ததால் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். இனியாவது, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!