இறுதி வாக்காளர் பட்டியல்: கட்சியினர் முன்னிலையில் மதுரை ஆட்சியர் வெளியீடு
மதுரை மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியவை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கத்திருத்த2022-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2022-ஆம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 31 ஆயிரத்து 825 நபர்களும்இ பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 81 ஆயிரத்து 7 நபர்களும் மற்றும் மூன்றாம் பாலின வாக்களர்களின் எண்ணிக்கை 201 ஆக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 13 ஆயிரத்து 33 நபர்கள் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 01.11.2021-ஆம் தேதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 26 இலட்சத்து 81 ஆயிரத்து 727 வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2022-ன்படி (இறப்பு இடமாற்றம்) ஒருமுறைக்கும் மேலான பதிவுகள்) 10 ஆயிரத்து 768 நீக்கப்பட்டு மற்றும் புதிய வாக்காளர்களாக 42 ஆயிரத்து 74 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே 01.11.2021 மற்றும் 05.01.2022 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட நாட்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை வித்தியாசம் 31 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.
அதிகமான வாக்காளர்கள் (வாக்காளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 31 ஆயிரத்து 829) கொண்ட தொகுதியாக 189 மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உள்ளது. குறைவான வாக்காளர்கள் (வாக்காளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 194) கொண்ட தொகுதியாக 190 சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் மொத்தம் 1163 வாக்குசாவடி அமைவிடங்களில் வாக்குசாவடிகளின் மொத்த எண்ணிக்கையாக 2718 வாக்குசாவடிகள் உள்ளன என்றார் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu