ஒவ்வொருவரும் பழைய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்: மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்

மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில், தவத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 28-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன்.
ஒவ்வொருவரும் பழைய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்றார் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன்
பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி தலைமை வகித்தார். நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்மன் மல்லிகை நாகரத்தினம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் பங்கேற்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மேலும் அவர் பேசியதாவது, கற்ற கல்வியை எவர் ஒருவர் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாரோ அவர்தான் கல்வியாளர் என்றார் மகாத்மா காந்தியடிகள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நல்ல செயல்களை நாளும் மக்களை பின்பற்றச் சொன்னவர். இன்றைக்கு பழைய கலாசாரம் மறைந்துவிட்டது. நமது முன்னோர்கள் பின்பற்றிய கலாசாரத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் விடக்கூடாது. நமது கிராமத்தை, நமது தாய் தந்தையர்களை, கூட்டுக் குடும்ப முறையை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் .
எவன் ஒருவன் மக்களுக்காக உழைக்கிறான் என்றால் அவன்தான் சிறந்த குடிமகன்.28 ஆண்டுகளுக்குப் பிறகும் வாரியார் சுவாமிகளை இன்றைக்கும் நினைக்கிறோம் என்றால், அவரது தமிழ் பற்று மற்றும் ஆன்மீக, சமூக தொண்டு தான் காரணம்.அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் பின்பற்ற வேண்டும் வாரியார் சுவாமிகளின் கருத்துகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்ல செயல்களை செய்ய வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஒவ்வொருவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu