தேசிய போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
X

தேசிய போட்டியில் பதக்கங்களை வென்று  மதுரைக்கு திரும்பிய மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் 4-வது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி, 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகம்,கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில், தமிழகத்தில் இருந்து 33மாணவிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் யோகா, சிலம்பம், அதலெடிக், எடை தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு வயது அடிப்படையிலான பிரிவுகளில் கலந்துகொண்டனர்.போட்டியில், ஆர்வத்துடன் கலந்துகொண்ட மதுரையை சேர்ந்த மாணவிகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்தி 20 தங்க பதக்கங்களையும், 16 வெள்ளி பதக்கங்களும், 10 வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.

மேலும் , 3போட்டிகளில் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச்சென்றனர். இந்நிலையில், போட்டியில் பல்வேறு பதக்கங்கள் மற்றும் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற மாணவிகள் இன்று மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தபோது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற இந்த மாணவிகள் உலகளவிலான போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள் ளனர் என்பது குறிப்பிடதக்கது. மதுரையை சேர்ந்த 33மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்திட்ட நிலையிலும் உரிய அங்கீகாரமோ, பாராட்டுதலோ கிடைப்பதில்லை என மாணவிகள் எண்ணமாக இருந்தது. இதுபோன்று தேசிய அளவில் பங்கேற்று வெற்றிபெற்று சாதனை படைக்கும் மாணவிகளுக்கும் தேவையான உதவிகளையும், உரிய அங்கீகாரத்தையும் வழங்கிட அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story