ஆங்கில புத்தாண்டு: மதுரையிலுள்ள கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டு: மதுரையிலுள்ள   கோயில்களில் குவிந்த பக்தர்கள்
X

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், குவிந்த பக்தர்கள் கூட்டம்.

புத்தாண்டை முன்னிட்டு, இன்று மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவில், அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான சுவாமி கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.புத்தாண்டை முன்னிட்டு, இன்று மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணி முதலாகவே கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் நான்கு கோபுரவாசல் வீதியாகவும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு அதிகாலையிலிருந்து புத்தாடை அணிந்து வந்த பக்தர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்காணோர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தறனர்.மேலும், அம்மனுக்கும், சுவாமிக்கும் அதிகாலை முதலாகவே பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மன் சந்நிதி செல்லும் கோவில் வாசலில் புத்தாண்டை முன்னிட்டு பூ அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், விநாயகர் திரு உருவம் அலங்கரிக்கப்பட்ட கோலமிட்டுள்ளது பக்தர்கள் அதனை பக்தியுடன் பார்த்து செல்கின்றனர்.

Tags

Next Story
ai future project