சாலையில், தோண்டப்படும் பள்ளங்களால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி கவனிக்குமா?
சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி
மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரியின் டயர் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்; குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு:
மதுரை.
மதுரை லட்சுமிபுரம் பகுதியில் கடந்த ஒரு வருட காலத்திற்க்கும் மேலாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சாலையின் நடுவே சரிவர மூடாமல் உள்ளதால், அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாக வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை அவ்வழியாக சென்ற சரக்கு லாரியின் டயர் சிக்கிக்கொண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அவ்வழியாக பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்காண பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் ,லாரி சாலையில் சிக்கிக் கொண்டதால், கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து,பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் அப்ப சாலையை கடந்து செல்வதற்கு செய்வதறியாமல் நீண்ட நேரம் தவித்து நின்றனர். மதுரை நகரில் இதே போன்ற பல்வேறு பகுதிகளில் சாலையில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாததால்,
இரு சக்கரத்தை செல்வோர், தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது. மதுரை அண்ணா நகர் சுகுணா ஸ்டோரில் தொடங்கி அம்பிகா கல்லூரி வரை சாலைகள் சரிவர மூடப்படவில்லையாம். இதே போன்று சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல், பல வழித்தடங்களில் இடத்தங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல, மதுரை மருது பாண்டியர் தெரு, கோமதிபுரம் ஆகிய பகுதிகளிலும் குழாய் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, முதலில் மாநகராட்சி மேயர், ஆணையாளர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu