சிகிச்சைக்குப்பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட யானை

சிகிச்சைக்குப்பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட யானை
X

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட கோயில்யானை

கால்நடை மருத்துவர் உதவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து நடைபயணமாக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை(14). பதினோரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானையை இரண்டு பாகன்கள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வருடம் 24.05.20திடீரென யானை தெய்வானைக்கு மதம் பிடித்து யானைப்பாகன் காளீஸ்வரனை தாக்கியது. இதில், காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், யானை இங்கிருந்து (01.06.20) அன்று திருச்சி அருகே உள்ள யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு கால்நடை துறை சார்பில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு 8 மாதத்திறகு பின் 02.02.21 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கால்நடை துறை சார்பில் தீவிரமாக பராமரித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவர் உதவியுடன், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து நடைபயணமாக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare