மதுரைஅண்ணாநகர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்

மதுரைஅண்ணாநகர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்
X

மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாமில், சான்றுகளை வழங்கினார், செயற்பொறியாளர் டி. கே. சந்திரா.

இம்மாதம் 25.ம் தேதி நீட்டிக்கப் பட்டுள்ளதால், பெயர் மாற்றம் செய்வோர்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்

மதுரை அண்ணா நகர் மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

இந்த முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யக்கோரி மனு அளித்தவர்களை விசாரணை செய்த பிறகு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்த உத்தரவு நகலை, மதுரை பெருநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் டி.கே. சந்திரா வழங்கினார்.

அப்போது அவர் கூறியது:மதுரை பெருநகர் வட்டத்தில் உள்ள மின் நுகர்வோர், இதுபோல் உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.உரிய ஆவணங்கள் இருந்தால், மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்று துரிதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமானது, இம்மாதம் 25.ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், பெயர் மாற்றம் செய்வோர்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மின்வாரிய செயற்பொறியாளர் ஜெ. மலர்விழி முன்னிலை வகித்தார். மதுரை அண்ணாநகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கே. மூக்கையா, மதிப்பீட்டு அலுவலர் எஸ். ரமேஷ், அண்ணாநகர் சிறப்புநிலை முகவர் பாலராமலிங்கம் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், இந்த மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த முகாமின் போது, மின் நுகர்வோர் ஒருவர், மதுரை அண்ணாநகர் மின்வாரிய அலுவலகத்தை, மாடித் தளத்திலிருந்து, தரை தளத்துக்கு மாற்ற வேண்டும் என, மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் டி.கே. சந்திரா விடம் கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!