மதுரை நகரில் நடந்த பல்வேறு சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழப்பு
பைல் படம்
பூ வியாபாரம் செய்யும் பெண்ணிடம் நகை பணம் திருட்டு:பெண்ணும் சிறுவனும் கைது
மதுரை திடீர் நகர் பர்மா காலனி அலாவுதீன் தோப்புவை சேர்ந்தவர் சுல்தான் மனைவி பானு 40. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் போர்டி கோவில் பஸ்சுக்காக காத்திருந்தார். பெரியார் நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏற முயன்றபோது, அவரிடம் இருந்த மணிபர்சைசை இரண்டு பேர் திருடினர் .அவர்கள் இருவரையும் பானு விரட்டி பிடித்தார். பிடிபட்ட நபர்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலத்தைச் சேர்ந்த நாகவல்லி 50. அதேஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் பானுவின் பர்சை திருட முயன்றபோது போது, பிடிபட்டனர்.பானு ,அந்த பர்ஸில் இரண்டு கிராம் தாலியும், ரூபாய் இரண்டாயிரமும் வைத்திருந்தார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் எட்டு பேர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை
மதுரை அவனியாபுரம் ஜே ஜே நகர் முருகன் மனைவி சுசீலா 50. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்வதற்காக ஓபி சீட்டு பதிவு செய்யும் இடத்தில் காத்திருந்தார் .அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்து பலியானார். இது குறித்து அவருடைய தங்கை தெய்வானை அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சுசிலாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நரிமேடு தாமஸ் தெரு முகமது இஸ்மாயில் மனைவி ரகிலா பானு 38 .இவர் வீட்டில் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் .இது குறித்து அவருடைய கணவர் முகமது இஸ்மாயில் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருடைய சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேடு மீன் மார்க்கெட் அருகே முதியவர் மயங்கி விழுந்து மரணம்
மதுரை இவர், கரிமேடு மீன் மார்க்கெட் அருகே அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தலை சுற்றி மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து, இவரது உறவினர் அய்யா பாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராட்டிபத்தில் அரசு பஸ் டிரைவர் மரணம்
மதுரை, விராட்டிபத்து ஜெய்நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் 59. இவர் அரசு போக்குவரத்து கழக டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு , சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே டிரைவர் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது சாவு குறித்து அவர் மனைவி பாண்டி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து , விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, நேதாஜி ரோடு பெருங்குடி பள்ளிவாசல் சந்துவை சேர்ந்தவர் காளிராஜ் மனைவி ஜோதிலட்சுமி 23. இவருக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம். திருமணமான நாளில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி உள்ளனர். இதனால் கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்த ஜோதிலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா தங்கமணி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோதிலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாத்ரூமில் தவறி விழுந்த முதியவர் மரணம்
மதுரை, மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை 70. இவர் வீட்டில் பாத்ரூமமிற்கு சென்றார்.அப்போது வாலிக்கு விழுந்தார். அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பிச்சை பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகள் சுப்புலட்சுமி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, புதுராம்நாட் ரோடு, கம்பர்தெரு, தமிழர் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி 52 .இவர் குடும்பப் பிரச்னை காரணமாக உறவினர்களுடன் கடன் வாங்கியுள்ளார் .கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கடி செய்யவே மனமடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவர் முனியசாமி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் மயங்கி விழுந்து மரணம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சந்திரா நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சந்தோஷ் குமார் . ஏற்கெனவே, சர்க்கரை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.இவர், மதுரை வந்திருந்தார். மதுரை லட்சுமிபுரம் ஆறாவது தெருவில் பாத்திரக்கடை ஒன்றின் அருகே சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்தார். இந்த நிலையில் அவர் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் உயிரிழந்தார்.இது குறித்து அவருடைய மனைவி தீபிகா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu