அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் வருகை

அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் வருகை
X

மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அமலாக்கத்துல் அதிகாரிகள் வந்திருந்தனர். 

ED Officers Enquiry At Madurai மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருவதாக தகவலையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

ED Officers Enquiry At Madurai

மத்திய அரசின் துறையான அமலாக்கத்துறை அரசியல்வாதிகள், முக்கிய விஐபிக்கள் புகார் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கும்போது அதிரடி சோதனை நடத்துவர் இத்துறை சார்ந்த அதிகாரிகள். ஆனால் இந்த அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் விசாரணைக்கு சென்றார். அப்போது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சமாக பணம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20 லட்சம் பெற்றார் இதனை, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் ,லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக அங்கிட் திவாரி வீடு மற்றும் மதுரையில் உள்ள மரக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 01. 12.23 அன்று சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 01.12.23 அமலாக்கத்துறை மதுரை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்ற தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் சங்கர் ஜுவாலிடம், மதுரை மண்டல அமலாக்க பிரிவு உதவி ஆணையர் பிரிஜேஸ் பணிவால் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து, தல்லாகுளம் காவல் நிலையத்தில் (இன்று) (26.12.23) விசாரணை நடைபெறுவதையொட்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தல்லாகுளம் போலீஸார் ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளனர்.இதனால் ,இன்று காலை முதல் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.

மத்திய அரசானது ஊழலை ஒழிக்க இந்த துறையை நிர்வகித்து வருகிறது. ஆனால் இத்துறை சார்ந்த அதிகாரியே இதுபோல் குற்றசெயல்களில் ஈடுபடும்போது மக்களுக்கு எப்படி நம்பகத்தன்மை வரும் என்பதுதான் கேள்விக்குறி. எத்தனையோ அரசியல்வாதிகளின் வீடுகளில் நாள் மற்றும் மணிக்கணக்கில் சோதனை செய்கின்றனர். அதுவும் இதுபோல் பணம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்களா? என்ற சந்தேகம் தற்போது பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இனியாவது மத்திய அரசுஇத்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் களைய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!