மதுரையில், மதுபோதையில் ஆட்டோ ஒட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்..!

மதுரையில், மதுபோதையில் ஆட்டோ ஒட்டியவருக்கு ரூ.10 ஆயிரம்  அபராதம்..!
X

அபராதம் விதிக்கப்பட்ட ரசீது 

மதுரையில் மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டிவந்த ஓட்டுனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை:

மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நரசிங்கம் பகுதியில், உள்ள சமுதாயக் கூடம் அருகே, யானைமலை ஒத்தக்கடை போக்குவரத்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்த மார்த்தாண்டன் என்பவரிடம் சோதனை செய்தனர்.

இதில், அவர் மது அருந்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மது போதையில் வாகனம் ஓட்டி வந்த மார்த்தாண்டனுக்கு, போக்குவரத்து காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மார்த்தாண்டன் போக்குவரத்து காவல் துறையினரிடம் ஆட்டோவை ஒப்படைத்து விட்டு, வீட்டிற்கு நடந்தே சென்றார்.

மதுரை மாவட்டத்தில், ஆட்டோக்கள் பல விதிகளை மீறி இயக்கப்படுவதாகவும், பல இடங்களில் ஆட்டோக்கள் அரசு சிட்டி பஸ் போலவே செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மதுரை நகரில், அண்ணாநகர், அண்ணாநிலையம்,கருப்பாயூரணி, சிம்மக்கல், புதூர், சோழவந்தான், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆட்டோக்கள் பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பஸ் படிக்கட்டுகளுக்கு செல்ல இடையூறாக உள்ளதாம்.

அண்ணா பஸ் நிலையம் வெளியே, போலீஸ் பூத் அருகே ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி, பயணிகளை அழைப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.மதுரை நகர் போலீஸ் கமிஷினர், சிட்டி பஸ்களை போல செயல் படும், ஆட்டோக்களை கட்டுப்

படுத்துவதுடன், மீட்டர் பொருத்தி, உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!