மதுரை மாநகராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியல்: ஆணையாளர் வெளியீடு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., வெளியிட்டார்.
மதுரை மாநகராட்சி மொத்த வாக்காளர்கள் 01.11.2021 தேதி வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாநகராட்சியின் 100 வார்டுகளில் 6,51,523 ஆண் வாக்காளர்கள், 6,73,457 பெண் வாக்காளர்கள், 129 இதர வாக்காளர்கள் என மொத்தம் 13,25,109 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி, மண்டலம் 1ல் 1,45,077 ஆண் வாக்காளர்கள், 1,50,604 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 31, மொத்தம் 2,95,712 வாக்காளர்களும், மண்டலம் 2ல் 1,60,860 ஆண் வாக்காளர்கள், 1,68,439 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 38, மொத்தம் 3,29,337 வாக்காளர்களும், மண்டலம் 3-ல் 1,87,914 ஆண் வாக்காளர்கள், 1,91,085 பெண் வாக்காளர்கள், இதர 38 வாக்காளர்கள், மொத்தம் 3,79,037 வாக்காளர்களும், மண்டலம் 4-ல் 1,57,672 ஆண் வாக்காளர்கள், 1,63,329 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 22, மொத்தம் 3,21,023 வாக்காளர்களும் உள்ளனர்.
வாக்குச்சாவடிகள் மண்டலம் 1-ல் 319 வாக்குச்சாவடிகள், மண்டலம் 2ல் 319 வாக்குச்சாவடிகள், மண்டலம் 3-ல் 385 வாக்குச்சாவடிகள், மண்டலம் 4-ல் 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1307 வாக்குச்சாவடிகள் உள்ளன. இப்பட்டியல் குறித்து, மறுப்புரை அல்லது கருத்துரை ஏதும் தெரிவிக்க விரும்புகிற நபர்கள் 08.11.2021 பிற்பகல் 4.00 மணிக்குள்ளாகவோ அல்லது அந்நாளுக்கு முன்னரோ மாநகராட்சி ஆணையாளரிடமோ அல்லது நான்கு மண்டல உதவி ஆணையாளர்களிடமோ எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu