ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜாதி வர்ணம் பூச வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு  ஜாதி வர்ணம் பூச வேண்டாம்:  விவசாயிகள் கோரிக்கை
X

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த  அவனியாபுரம் பகுதி விவசாயிகள்

அவனியாபுரம் பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜாதி வண்ணம் பூச வேண்டாம் என அவனியாபுரம் பகுதி அனைத்து விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஆகும். தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்குத் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகிறன.

ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

இதில், தை முதல்நாளில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினர் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 4 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்திவந்தது.

இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி -15ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை அவனியாபுரம் தென்கால் பாசன கால்வாய் விவசாயிகள் சங்கத்தினரே நடத்த அனுமதி அளிக்க கோரி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அரசின் வழிகாட்டுதலோடு அனைத்து முன்னேற்பாடுகளை செய்து அமைதியான முறையில் நடத்திட விவசாய சங்கத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு சாதி சாயம் பூச வேண்டாம் எனவும், வருவாய் கோட்டாச்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி சாதி சங்கங்களை சிலர் ஒருங்கிணைப்பதாகவும், அவனியாபுரம் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் காளை வளர்ப்போரையும் இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சாதி சங்கங்களுக்கோ, தனி அமைப்பினருக்கோ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை அளிக்க கூடாது. அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறினர். இது தொடர்பான மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடமும் வழங்கினர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!