மதுரையில் அடிப்படை வசதிகள் செய்வேன் எனக் கூறி வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர்

மதுரையில் அடிப்படை வசதிகள் செய்வேன் எனக் கூறி வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர்
X
பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என வாக்குறுதி அளித்து திமுக வேட்பாளர் வாக்குகள் சேகரித்தார்.

மதுரையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை மாநகராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிடும், திமுக நிர்வாகியும், வேட்பாளருமான ராஜா என்ற பொன்வளவன், தாசில்தார் நகர் பள்ளிவாசல் தெருவில் சென்று, தமக்கு வாக்களித்தால், குடிநீர், சாலை வசதி, தெரு விளக்குகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை செய்வேன் என்றும், பொதுமக்கள், தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என வாக்குறுதி அளித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார் அவருடன், திமுக கிளைக் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், சிவா, சேது, மணி, கருப்பச்சாமி உள்ளிட்டோர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!