மாவட்ட கால்பந்தாட்ட போட்டி: டிவிஎஸ் அணி சாம்பியன

மாவட்ட கால்பந்தாட்ட போட்டி: டிவிஎஸ் அணி சாம்பியன
X

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மதுரையில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில், டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொன்போஸ்கோ இளையோர் மன்றம் சார்பில், இளைஞர்கள் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில், கடந்த 16 ம் தேதி ஐவர் கால்பந்து போட்டி தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெற்றன.

இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்பந்தாட்ட அணி கலந்து கொண்டன. மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், மதுரை டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை பிடித்தது. அந்த அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை பிடித்த தூத்துக்குடி கால்பந்தாட்ட அணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பை, மூன்றாவது இடத்தை தொன்போஸ்கோ கால்பந்தாட்ட அணிக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பை வழங்கினர். போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்கீப்பர் மற்றும் நட்சத்திர வீரர், சிறந்த விளையாட்டு வீரர் ஆகியோருக்கு நினைவுப்பரிசு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சேது பொறியியல் கல்லூரி சேர்மன் சீனி முகம்மது, பங்குத் தந்தை ஜான் கென்னடி, மரிய ஜோசப், காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!