மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு புதிய வாகனம் வழங்கல்

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு புதிய வாகனம் வழங்கல்
X

பைல் படம்

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான வாகனங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரால் கடந்த 22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-ன்கீழ் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,முதற்கட்டமாக மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்காக வாகனங்கள் வாங்கப்பட்டது. இதில், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் பயன்பாட்டிற்கான வாகனம் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான வாகனங்களை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், கொடியசைத்து பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம்,மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சீ.ராஜ்மோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.அர்விந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!