மதுரை மீனாட்சி மருத்துவமனையில் இஸ்ரேல் மருத்துவக் குழுவுடன் கலந்துரையாடல்

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் இஸ்ரேல் மருத்துவக் குழுவுடன் கலந்துரையாடல்
X
கொரோனா தொற்று கடந்த 15 மாதங்களாக உலகையே உலுக்கியுள்ளது. மருத்துவ உலகமே, பல சவால்களை சந்தித்துள்ளது

கோவிட் தொற்றில் முக்கியமாக கற்றுக் கொண்டது தொடர்பாக இஸ்ரேல் மருத்துல நிபுணர்களுடனான கருத்து பகிர்வு கூட்டம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது

கோவிட் தொற்றுக்கான பதில் வினைகளில் முக்கிய கற்றல்தல்களை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் இஸ்ரேல் நாட்டின் நிபுணர்கள். பகிர்ந்து கொண்டநிகழ்வை தொடக்கி வைத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் குரு சங்கர் பேசியது:

கொரோனா தொற்று கடந்த 15 மாதங்களாக உலகையே உலுக்கியுள்ளது. மருத்துவ உலகமே, பல சவால்களை சந்தித்துள்ளது. மதுரையில் எங்கள் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளை, திறம்பட மருத்துவம் அளித்தும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளோம். கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ உலகமே, போராடிய காலக் கட்டத்தை நாம் மறக்கமுடியாது.

டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசியது: கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளை திறம்பட சிகிச்சை அளித்தும், பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. மேலும், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு, ரத்த வங்கி, குழந்தைகள் நலப்பிரிவை பார்வையிட்டனர். இஸ்ரேல் குழுவுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழுவுடன், மருத்துவ முறைகளை பகிர்ந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business