ஆன் லைன் விளையாட்டின் தீமைகள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர்கிரைம் போலீஸார்
PUBG, FREE FIRE உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து சைபர் கிரைம் போலீஸார் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மதுரை சரக சைபர் கிரைம் போலீஸார் ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்து சைபர் கிரைம் மதுரை சரக காவல் ஆய்வாளர் செந்தில் இலந்திராஜன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுரையில் உள்ள பள்ளி சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி மர்ம கும்பல் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்து சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பள்ளிச் சிறார்கள் பப்ஜி, ப்ரீ பையர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்கும் அபாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இதில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu