வளர்ச்சிப் பணிகள்: மேயர், ஆணையாளர் ஆய்வு

வளர்ச்சிப் பணிகள்: மேயர், ஆணையாளர் ஆய்வு
X

கே.கே.நகர். பழைய எல்இ.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்த மதுரை மேயர் மற்றும் ஆணையர்

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்இந்திராணி பொன்வசந்த் , தலைமையில் நடைபெற்றது:

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்து வரி திருத்தம் தொடர்பாக 12 மனுக்களும், சாலைவசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 29 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 4 மனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 15 மனுக்களுக்கும் தீர்வு காணப் பட்டுள்ளது.

தொடர்ந்து, மண்டலம் 2 கே.கே.நகர் மெயின் சாலை (அப்பல்லோ மருத்துவமனை அருகில்) நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறு இன்றியும், பாதுகாப்பான முறையிலும் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

கே.கே.நகர். பழைய எல்இ.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக், போர்வெல்,அமரும் இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற் கொள்ளப்பட்டு அழகுப் படுத்தப்பட்டுள்ளது. இப்பூங்காவில், மேயர் ஆய்வு மேற்கொண்டு பூங்காவினை தொடர்ந்து தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.

தொடர்ந்து , மானகிரி மாநகராட்சி ஆரம்பபள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு படிக்கும் குழந்தைகளிடம் நடத்தப்படும் பாடங்கள் குறித்து கேட்டறிந்து மேயர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார்கள். பள்ளிக்கு அருகே உள்ள மானகிரி ஊரணியை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் , எஸ்.எம்.பி.காலனியில் தூய்மைப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் ,துணை ஆணையாளர் தயாநிதி , நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, செயற்பொறியாளர்கள் பாக்கிய லெட்சுமி, மாலதி, உதவி செயற் பொறியாளர் காமராஜ், உதவிப்பொறியாளர்கள் பொன்மணி , கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மாலதி, பாண்டீஸ்வரி, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story