மதுரை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: மேயர் தொடக்கம்
டெங்கு தடுப்பு பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது..
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், டெங்கு தடுப்பு பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களை,மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் (14.12.2023) இன்று பங்கேற்று கொடியசைத்து பணிகளை தொடக்கி வைத்தனர்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலும் பணியாளர்களை கொண்டு டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி மேற் கொள்ளவும், டெங்கு கொசு புழு உருவாகுவதை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் கொசுப்புழு உருவாகும் பகுதிகளை கண்டறிந்து கொசு புகை பரப்பும் பணி மற்றும் மருந்து தெளிக்கும் பணி , கொசு மருந்து புகை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் அனைத்து வார்டு பகுதிகளிலும் நிலையான பயணத் திட்டத்தின் படி அதற்கென பணியாளர்களை ஒதுக்கீடு செய்து முதிர் கொசுக்களை கட்டுப்படுத்திட கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாகவும் குளிர்காலமாக இருப்பதாலும் டெங்கு கொசு புழு உற்பத்தி அதிகம் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு போதிய அளவில் கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பொது சுகாதார அத்தியாவசிய அவசியம் கருதி பணி மேற்கொள்ள ரூ.44.18 லட்சம் மதிப்பீட்டில் 25 கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் 4 வாகனங்களும் புதிதாக வாங்கப் பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களை மேயர், ஆணையாளர், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, வாசுகி, முகேஷ்சர்மா, சுவிதா, சுகாதாரக்குழு தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், சுகாதார அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu