மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலர் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

கேரளாவில் மாநில எஸ்டிபிஐ கட்சியின் செயலர் கே.எஸ். ஜான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகே எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட பொதுச் செயலர் கே. ஜியாவுதீன், தெற்கு மாவட்ட பொதுச்செயலர் சாகுல் ஹமீது, தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்டத் தலைவர் பிலால் பீம், மண்டலச் செயலர் முஜிபுர் ரஹ்மான் அபுதாகிர், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலச் செயலர் நஜ்மா பேகம், செய்தி தொடர்பாளர் சிக்கந்தர், மகளிர் அணியினர் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story