மதுரையில் சிமெண்ட் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரையில் சிமெண்ட் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

சிமென்ட், கம்பி கடும் விலையேற்றத்தைக் கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர்

மதுரை மாவட்ட கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாசெட் இணை செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். கிரெடாய் செயலாளர் முத்து விஜயன் முன்னிலை வகித்தார்.

ஆறுமாதத்தில் கம்பி விலை 50 சதவீதமும், சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.100 ம் உயர்ந்துள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இது தவிர ,ஜல்லி, செங்கல், எம்.சான்ட் போன்றவற்றின் விலையும் கடுமையாக உள்ள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை நம்பி உள்ள 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றார். கிணற்று மண், குவாரியை திறந்து, சரியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். அரசு சான்று இல்லாமல் போலியாத இயங்கும் எம்.சான்ட் நிறுவங்களை கண்டறித்து தடை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏ.எம்.சி.இ. தலைவர் ரமேஷ்குமார், சோக்கோ தலைவர் யோகநாதன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story