தீபாவளி: மது விற்பனையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மதுரை மாவட்டம்...!

தீபாவளி: மது விற்பனையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த  மதுரை மாவட்டம்...!
X

பைல் படம்

மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற பேராபத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்

98.89 கோடிக்கு தீபாவளி கொண்டாட்டத்துக்காக மது விற்பனை நடைபெற்றதால் மதுரையே முதலிடம் பிடித்தது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மதுவின் மீதுள்ள மோகம் குறையவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதில் ,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கும், சென்னையில் ரூ.79.84 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும், திருச்சியில் ரூ.89.95 கோடிக்கும் மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.74.46 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களின் தலைமையிடமாக பார்க்கப்படும் மதுரை மாவட்டத்தில் நிகழாண்டில் மது விற்பனை.யில் முதலிடம் பிடித்துள்ளது. இது அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் மகிழ்ந்தபோதிலும், மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற பேராபத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
விவசாயத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சிறந்த AI!